Friday, 9 May 2014

வீட்டினுள் அரைகுறை ஆடையுடன்

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். Al Quran 24:58-60

No comments:

Post a Comment