Thursday, 15 May 2014

குடும்ப கட்டுப்பாடு

கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்‘ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5209)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள் அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2606)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2610)
மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.
நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2542).
தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும். தற்காலிக கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.
குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.
காப்பர் டி - பெண்கள் அணிவது மருத்துவர்களிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும். ஏனென்றால் நிறைய பெண்களுக்கு அது உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆணுறை பொறுத்தவரை பிரச்னை இல்லை. 

அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு செய்து கொள்ள வேண்டும் 

Sunday, 11 May 2014

மணப்பெண்ணின் முன்நெற்றியில் கை வைத்து ஓதும் துஆ

திருமணம் முடிக்கும் போது மணப்பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதுவதற்கும் புதிய வாகனங்கள் வாங்கும் போதும் வாகனத்தின் முன்பகுதியை பிடித்து இப்பிரார்த்தனையை ஓதுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உண்டு

سنن ابن ماجه - كتاب النكاح
باب ما يقول الرجل إذا دخلت عليه أهله - حديث:‏1914‏
حدثنا محمد بن يحيى ، وصالح بن محمد بن يحيى القطان ، قالا : حدثنا عبيد الله بن موسى قال : حدثنا سفيان ، عن محمد بن عجلان ، عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده عبد الله بن عمرو ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " إذا أفاد أحدكم امرأة ، أو خادما ، أو دابة ، فليأخذ بناصيتها ، وليقل : اللهم إني أسألك من خيرها ، وخير ما جبلت عليه ، وأعوذ بك من شرها ، وشر ما جبلت عليه
 
உங்களில் ஒருவர் ஒரு பெண்னை அல்லது ஒரு பணிவிடையாளரை அல்லது வாகனத்தை பெற்றுக் கொண்டால் அதன் முன்பகுதியை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளட்டும் அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஹைரிஹா வஹைரி மா ஜுபிலத் அலைஹி வஅஊது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜுபிலத் அலைஹி
அறிவிப்பவர் அப்துல்லாஹிப்னு அம்ரு(ரழி) ஆதாரம்: இப்னு மாஜா,இலக்கம்:1914

துஆவின் அர்த்தம்:

இறைவா! இதன் நன்மையை உன்னிடம் வேண்டுகிறேன் இயற்கையாகவே இதில் அமைக்கப்பட்ட நன்மையை உன்னிடம் வேண்டுகிறேன் மேலும் இதன் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன் இயற்கையாகவே இதில் அமைக்கப்பட்ட தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

முன்பகுதி என்பதற்கு ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை நாஸியத் என்பதாகும் நாஸியத் என்றால் முன்னெற்றி என அர்த்தமாகும்
எனவே மணப்பெண்னை முதன் முதலில் சந்திக்கும் திருமண நிகழ்வில் இதை நாம் செய்வது நபிவழியாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

எந்த பெண் சிறந்தவள் மணமுடிப்பதற்கு?

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக 
மணம் முடிக்கப்படுகிறாள். 

அவையாவன:

1. அவளது பணத்திற்காக,
2. அவளது குடும்ப கௌரவத்திற்காக,
3. அவளது அழகிற்காக,
4. அவளது மார்க்க விழுமியங்களுக்காக.


நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். 


உன் கரத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வாய்” 

என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

தனிமையில் ஒரு பெண் மற்றும் ஆணின் இறையச்சம்

உங்களில் முன் வாழ்ந்த மக்களில் மூவர் தூர பயணத்தில் இருக்கும் போது இரவாகி விட்டது ஒரு குகையில் இரவைக் கழிக்க  நாடி அதில் நுழைந்தார்கள். அப்பொழுது ஒரு பாறாங்கல் உருண்டோடி வந்து அக்குகையின் வாசலை அடைத்து விட்டது. அல்லாஹ்விடம் பிரார்ப்பிப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர்

அவர்களில் ஒருவர் இறைவா  ! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர் அவ்விருவருக்கும் முன்பதாக நானோ, எனது மனைவி பிள்ளகளோ, எனது அடிமைகளோ உண்ண மாட்டோம். ஒரு நாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்;று விட்டேன் நான் திரும்பி வருவதற்குள் அவர்கள் இருவரும் உறங்கி விட்டனர் அவர்களுக்காக பாலைக் கறந்தேன் அவர்களை எழுப்புவதைஅல்லது அவர்களுக்கு முன்பதாக நாங்கள் அருந்துவதை விரும்பாமல் எனது பெற்றோர் விழிக்கும் வரை (வைகறை வரை) காத்திருந்தேன் அவர்கள் விழித்ததும் அவர்களுக்கு புகட்டினேன் அதன் பிறகே நாங்கள் அருந்தினோம். இறiவா ! இதனை நான் உனது திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை எங்களை விட்டும் அகற்றுவாயாக! எனக்கூறியதும் பாறாங்கல் ஓரளவு நகர்ந்தது,

இரண்டாமவர் கூறினார் இறைவா ! எனது உறவுக்காறப் பெண்ணொருத்தி அவள் எனக்கு  மிகப்பிரியமானவளாக இருந்தால் ஆண்கள் பெண்களை நேசிப்பதில் மிக அதிகமாக அவளை நான் நேசித்தேன் பின்னர் நான் அவளை எனது இச்சைக்காக நாடினேன் எனினும் அவள்(எனது ஆசைக்கு இணங்க) மறுத்து விட்டாள். பின்னர் பஞ்சமான ஓர் ஆண்டு வந்தது அப்பொழுது அவள் என்னிடம் வந்து பொருளாதார உதவிக் கோரினாள் அப்பொழுது அவள் எனக்கு விதித்த தடையை நீக்கி விட வேண்டும் எனக் கூறி அவளுக்கு 120 பொற்காசுகளைக் கொடுத்தேன் அவளும் சம்மதித்து பெற்றுக்கொண்டாள். அவளை நெருங்கும் பொழுது அல்லாஹ்வை பயந்து கொள்! முத்திரையை அதற்குரிய உரிமையின்றி உடைத்து விடாதே! எனக்கூறினாள் அல்லாஹ்வுக்கு பயந்துகொள் என்று சொன்ன மாத்திரத்திலேயே நான் விலகி விட்டேன் அத்துடன் அவளிடம் கொடுத்த பொற்காசுகளையும் அவளிடமே விட்டும் விட்டேன் இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் இந்த பாறாங்கல்லை விலகச் செய்திடுவாயாக ! எனக் கூறியதும் மீண்டும் ஓரளவு விலகியது.
 
மூன்றாமவர் கூறினார் இறைவா  ! நான் பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கினேன் அதில் ஒருவர் மட்டும் அவருடைய கூலியை வாங்காமல் சென்று விட்டார் எனினும் அவரது கூலியை எனது பண்ணையில் தனியாக முதலீடு செய்து அதனுடைய வரவு செலவை பாதுகாத்து வந்தேன் அதிலிருந்து பல செல்வங்கள் பெருகி வந்தன. சில காலத்துக்குப் பிறகு அந்த வேலையால் என்னிடம் வந்து ஓ இறை அடியாரே ! எனது கூலியை நிறைவேற்றுவீராக ! என்று கூறினார் அதற்கு நான் நீர் பார்க்கும் இந்த ஒட்டகைகள்,   மாடுகள்,   ஆடுகள்   அடிமைகள்  அனைத்தும்   உனது  சொத்துக்கள் தான்  என்றேன்.  அதற்கவர் ஓ இறை அடியாரே என்னை நீர் கேலி செய்கிறீரா? என்றார் அதற்கு நான் உம்மை கேலி செய்ய வில்லை உண்மையைத்தான் சொல்கிறேன் என்றேன். பிறகு நான் கூறியபடியே  அவரது எல்லாப்பொருள்களையும் எடுத்து சென்றார் அதில் அவர் எந்தப் பொருளையும் விட்டு செல்ல வில்லை.
 
இறiவா! இதை நான் உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால் எங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையை எங்களை விட்டு அகற்றுவாயாக! என்றதும் பாறை முழுமையாக நகர்ந்தது அவர்கள் அனைவரும் அக்குகையிலிருந்து அல்லாஹ்வை தியானம் செய்தவர்களாக வெளியேறினர். அல்லாhஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூற கேட்டதாக உமர் ( ரலி ) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: புகாரி, முஸ்லிம்

Friday, 9 May 2014

வீட்டினுள் அரைகுறை ஆடையுடன்

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். Al Quran 24:58-60

Thursday, 8 May 2014

மணமக்களை வாழ்த்தும் போது ஓதும் துஆ

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

Wednesday, 7 May 2014

மனைவியுடன் உறவு கொள்ளும்போது ஓதும் துஆ


மணமக்கள் கேட்கவேண்டிய துஆ:

ரப்பனா வஜ்அல்லா முஸ்லிமைனி ல(க்)க வமின் துர்ரியத்தினா உம்மதன் முஸ்லிமதன் ல(க்)க இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம் AlQuran 2:12

பொருள்:-
எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக. எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக. எங்களை (கருணையுடன் நோக்கி, எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கிறாய்.

உடலுறவின் போது ஓதும் துஆ:

ஒரு கணவன் தம் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவதும் இறைவனிடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுவதும் சுன்னத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

உங்களில் யாரேனும் தன் மனைவியிடம் உடல்உறவு கொள்ளும்போது,
பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா’

இறைவன் திருநாமத்தால் உடலுறவு கொள்கிறேன். இறைவனே! ஷைத்தானின் தீங்குகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! நீ எங்களுக்கு வழங்கும்; சந்ததிகளையும் ஷைத்தானைவிட்டும் பாதுகாப்பாயாக என ஓதுவாராக.

இவ்விதப் பிரார்த்தனைக்குப் பிறகு குழந்தை தரித்துப் பிறந்தால் அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தானின் தீங்குகள் அணுகாது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் 
ஏற்றுக் கொள்வாயாக!” Al Quran 14:40

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

21. எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74



Monday, 5 May 2014

நேரம் காலம் உண்டா உறவு வைப்பதற்கு ?

மனமும் உடலும் ஒத்துழைத்தால் எவ்வளவு தடவை வேணுமானாலும் செய்யலாம். இரவு பகல் காலை மாலை என்று பார்க்க தேவை இல்லை. ஆனால் உறவு செய்வதை கொண்டு தொழுகையை விட அனுமதி இல்லை. அந்தந்த நேரங்களில் கண்டிப்பாக தொழுதே ஆக  வேண்டும்.


மலத்துவாரத்தில் உறவு கொள்ளலாமா? கூடாது

இவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன் சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்)
இன்னும் சொல்வதானால் ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன், அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டான் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி

இறுக்கமான புர்கா அணியலாமா? கூடாது

 Normal Burqa is ok
இது முஸ்லிம் பெண்கள் அணிய வேண்டியது, நிகாப் அவரவது விருப்பம். 

Tight Burqa is not ok. This is saitaan model
இது சைத்தான்களின் ஆடை.
ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நரகவாசிகளில் இரு பிரிவினர் உள்ளனர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒரு பிரிவினர்: அவர்களிடம் பசுமாட்டின் வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பார்கள். மற்றொரு பிரிவினர் பெண்களாவர். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பர். தாமும் மையல் கொண்டு பிறரையும் மையல் கொள்ளச் செய்யக்கூடிய அவர்களின் கொண்டை ஒட்டகத்தின் திமில்போல ஒய்யாரமாக இருக்கும். அப்பெண்கள் சுவனம் செல்ல மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். உண்மையில் அதன் வாடை இவ்வளவு இவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றது’ (முஸ்லிம்)


ஆண் குழந்தைகளுக்கு கத்னா, பெண்களுக்கு பூப்பெய்தல்

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை. 
இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வதுமர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பதுஅக்குள் முடிகளை அகற்றுவதுநகங்களை வெட்டிக்கொள்வதுமீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : புகாரி (5889)

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.
இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

சொல்லப்போனால் பெண்களுக்கு இயற்கையாகவே பூப்பெய்தல் நடைபெறுவது தான் கத்னா என்றும் கூட நாம் எடுத்து கொள்ளலாம் 

குளிப்பு கடமை எப்போது ?

“நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6)
குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்புகடமையாகிவிடும். அவை பின்வருமாறு:
விந்து வெளிப்படல்:
“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும்.விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)
இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து(மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)
உடலுறவு கொள்ளல்: 
உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்துவெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)
ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)
மாதவிடாய் ஏற்படல்:
நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவுகொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவுகொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.
தொடர் உதிரப்போக்கு:
மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள்மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.
தொடர் உதிரப்போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது ”அது மாத விடாய் அல்ல. அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். (அதனால்தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியேறுகிறது) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333)
நான் சுத்தமாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன். எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்கமாக) உனக்கு மாதவிடாய்ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு. பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)
பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கி றேன். எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அதுமாதவிடாய் அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். உன் மாதவிடாய் நாட்களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துக் கொள். பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)
பிரசவத் தீட்டு ஏற்படல்: 
பிரசவத்தின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும். அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.

குளிக்கும் முறை:

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறுகடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)
நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)
நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)
அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.
உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன் னேன்.
மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவுகொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)
எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)

மர்ம உறுப்பு முடி அகற்றுதல்

இயற்கை மரபுகள் ஐந்தாகும். 
விருத்த சேதனம் செய்து கொள்வது, 
மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, 
மீசையைக் கத்தரிப்பது, 
நகங்களை வெட்டுவது, 
அக்குள் முடிகளை அகற்றுவது 
ஆகியவை தாம் அவை” 
என்று முகமதுநபி அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 5891

பெண்கள் : மாதவிடாய் முடிந்து சுத்தம் ஆகும் போது அக்குள் முடி மற்றும் மர்ம உறுப்பு முடி ஆகியவற்றை நீக்கி விடுவார்கள் 

Sunday, 4 May 2014

குழந்தைகளுக்கு தொழுகை, படுக்கை பிரிப்பு எப்பொழுது

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லும் ஆகும். அதில் கடின சித்தமுடைய, பலசாலிகளான மலக்குகள் உள்ளனர். அவன் ஏவியவற்றில் - அவர்கள் அவனுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அத்தஹ்ரீம்: 06)


இமாம் குர்துபீ (ரஹ்) கூறியதாக இமாம் முகாதில் (ரஹ்) கூறுவதாவது :

         ஒரு முஸ்லிம் தனது ஆத்மாவையும், தனது பிள்ளைகள், மனைவி, பணியாட்கள்,அடிமைகள் போன்றோரையும் நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அனைத்துக் கருமங்களையும் மேற்கொள்வது கடமையாகும். ஆகவே, பிள்ளைகள், மனைவி ஆகியோருக்கு மார்க்கத்தையும், நற்செயல்களையும், ஒழுக்கப் பண்பாடுகளையும் கற்றுக் கொடுப்பது கடமையாகும். இதனைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், (நபியே!) நீர் உம் குடும்பத்தினரை தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது பொறுமையுடன் இருப்பீராக. (தாஹா: 132). மேலும், அவன் கூறுகின்றான்:

பி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் ஏழு வயதை அடைந்தால் அவர்களுக்குத் தொழுகையைக் கொண்டு ஏவுங்கள்.(தப்ஸீருல் குர்துபீ: 18 -196)


பிள்ளைகளைப் பராமரித்து வளர்த்தல் பெற்றோர் மீதுள்ள கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவன், தன் குடிமக்களின் பொறுப்பாளன் ஆவான். ஒரு ஆண் தன் குடும்பத்தின் பொறுப்பாளர், ஒரு பெண் தனது கணவனின் வீட்டுக்கும், அவரது குழந்தைகளுக்கும் பொறுப்பாளர். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) அவர்கள்
நூல்: புகாரி, முஸ்லிம்

நபி (ஸல்) கூறினார்கள்: உங்கள் பிள்ளைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் அவர்களுக்குத் தொழுகையை ஏவுங்கள். பத்து வயதை அடைந்ததும் அவர்கள் தொழா விட்டால் அவர்களை அடித்துத் தொழ வையுங்கள். மேலும், படுக்கையில் அவர்களைப் பிரித்து விடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி)
நூல்: அபூ தாவூத் 495

நபி (ஸல்) அவர்கள், பெற்றோருக்குக் கீழ்வருமாறு வஸிய்யத் செய்கிறார்கள். அவர்கள் கூறுவதாவது: பிள்ளைகள் காண்கின்ற இடத்தில் ஒரு கசையைத் தொங்கவிடுங்கள், அது அவர்களுக்கு ஒழுக்கத்தைப் புகட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்: தபரானீ (10: 248), மஜ்மஉஸ்ஸவாயித் (8: 106)


Note:
ஆண் பிள்ளை மற்றும் பெண் பிள்ளை இருவர் படுக்கையையும் தனி தனியாக வைக்க வேண்டும் 







விபசாரம் செய்யலாமா? கூடாது தண்டனை

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. AlQuran 17:32

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்
AlQuran 25:68



பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

உமர் (ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்து கொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறை வேற்றினோம்' (என்றும் உமர் (ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன். (இதே விவரமுள்ள ஹதீஸை இங்கே  (Vol. 8, No. 817 and Vol. 9, No. 424;) மற்றும் சஹீஹ் முஸ்லீம் ஹதீஸில் இங்கே (No. 4194) பார்க்கலாம்)





துறவறம் கூடுமா

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் சென்று நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். நபிகள் நாயகத்தின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோற் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன் பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே, நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர்.

         அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவிற் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒரு நாட்கூட விடாமற் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர், நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக்கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

         அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து,இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே! அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, எனது வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று சொன்னார்கள். [அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி].

கணவன் மனைவி கூடினால் நன்மை கிடைக்குமா

அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அறிவிக்கிறார்கள்:
"...நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (ஸுப்ஹானல்லாஹ் - இறைவன் தூய்மையானவன் எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் எனக்கூறுதல்) ஓர் அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்லீலும் (லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறுதல்) அறச் செயலே,
நன்மையை ஏவுவதும் அறம், தீயதைத் தடுப்பதும் அறம், மற்றும் உங்கள் எல்லோரின் உடலுறவுச் செயலிலும் அறம் இருக்கிறது" என்றார்கள்.
(அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்), அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் உடலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவா அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்?"
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "அவர் அதை (உடலுறவை) விலக்கப்பட்ட விதத்தில் செய்தால் அவர் பாவம் செய்பவராகக் கருதப்படுவதை நீங்கள் அறியவில்லையா? அதுபோலத்தான், அவர் அதை அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்தால், அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்" (ஸஹீஹ் முஸ்லிம் 1006)
அல்லாஹ் தனது திருமறையாம் அல்குர்ஆனில் கூறுகின்றான்; "....மேலும், இப்போது அவர்களுடன் (உங்கள் துணைவியருடன்) உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)

முன் விளையாட்டு அவசியம்

'ஒரு முஸ்லிம் விளையாடும் எல்லா விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள்.'' 
(ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433).

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முன்விளையாட்டை ஊக்குவித்துள்ளார்கள் என்பதை நபிமொழிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; "நான் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வினவினார்கள், 'உமக்குத் திருமணமாகிவிட்டதா?' அதற்கு நான் 'ஆம்' என்றேன். '(அவள்) கன்னிப்பெண்ணா ஏற்கனவே மணமானவளா?' எனக் கேட்டார்கள். 'ஏற்கனவே மணமானவள்' என்றேன். "ஏன் கன்னிப்பெண்ணை மண முடித்திருக்கக்கூடாதா? அப்போது நீ அவளுடன் விளையாடலாம், அவள் உன்னுடன் விளையாடலாம், அல்லவா?" எனக் கூறினார்கள். 
(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1991)

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: "புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)". (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும். "அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிரார்கள்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், "நான் ஆயிஷாவிடம் 'அது நீங்களாகத்தான் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:." (ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181, சுன்பன் அந் நஸாஈ 170)