விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லும் ஆகும். அதில் கடின சித்தமுடைய, பலசாலிகளான மலக்குகள் உள்ளனர். அவன் ஏவியவற்றில் - அவர்கள் அவனுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அத்தஹ்ரீம்: 06)
Note:
ஆண் பிள்ளை மற்றும் பெண் பிள்ளை இருவர் படுக்கையையும் தனி தனியாக வைக்க வேண்டும்
இமாம் குர்துபீ (ரஹ்) கூறியதாக இமாம் முகாதில் (ரஹ்) கூறுவதாவது :
|
ஒரு முஸ்லிம் தனது ஆத்மாவையும், தனது பிள்ளைகள், மனைவி, பணியாட்கள்,அடிமைகள் போன்றோரையும் நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அனைத்துக் கருமங்களையும் மேற்கொள்வது கடமையாகும். ஆகவே, பிள்ளைகள், மனைவி ஆகியோருக்கு மார்க்கத்தையும், நற்செயல்களையும், ஒழுக்கப் பண்பாடுகளையும் கற்றுக் கொடுப்பது கடமையாகும். இதனைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், (நபியே!) நீர் உம் குடும்பத்தினரை தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது பொறுமையுடன் இருப்பீராக. (தாஹா: 132). மேலும், அவன் கூறுகின்றான்:
பி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் ஏழு வயதை அடைந்தால் அவர்களுக்குத் தொழுகையைக் கொண்டு ஏவுங்கள்.(தப்ஸீருல் குர்துபீ: 18 -196)
|
பிள்ளைகளைப் பராமரித்து வளர்த்தல் பெற்றோர் மீதுள்ள கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவன், தன் குடிமக்களின் பொறுப்பாளன் ஆவான். ஒரு ஆண் தன் குடும்பத்தின் பொறுப்பாளர், ஒரு பெண் தனது கணவனின் வீட்டுக்கும், அவரது குழந்தைகளுக்கும் பொறுப்பாளர். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) அவர்கள்
நூல்: புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) கூறினார்கள்: உங்கள் பிள்ளைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் அவர்களுக்குத் தொழுகையை ஏவுங்கள். பத்து வயதை அடைந்ததும் அவர்கள் தொழா விட்டால் அவர்களை அடித்துத் தொழ வையுங்கள். மேலும், படுக்கையில் அவர்களைப் பிரித்து விடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி)
நூல்: அபூ தாவூத் 495
நபி (ஸல்) அவர்கள், பெற்றோருக்குக் கீழ்வருமாறு வஸிய்யத் செய்கிறார்கள். அவர்கள் கூறுவதாவது: ‘பிள்ளைகள் காண்கின்ற இடத்தில் ஒரு கசையைத் தொங்கவிடுங்கள், அது அவர்களுக்கு ஒழுக்கத்தைப் புகட்டும்.’
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்: தபரானீ (10: 248), மஜ்மஉஸ்ஸவாயித் (8: 106)
ஆண் பிள்ளை மற்றும் பெண் பிள்ளை இருவர் படுக்கையையும் தனி தனியாக வைக்க வேண்டும்
No comments:
Post a Comment