திருமணம்
முடிக்கும் போது மணப்பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து பின்வரும்
பிரார்த்தனையை ஓதுவதற்கும் புதிய வாகனங்கள் வாங்கும் போதும் வாகனத்தின்
முன்பகுதியை பிடித்து இப்பிரார்த்தனையை ஓதுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம்
உண்டு
سنن ابن ماجه - كتاب النكاح
باب ما يقول الرجل إذا دخلت عليه أهله - حديث:1914
حدثنا
محمد بن يحيى ، وصالح بن محمد بن يحيى القطان ، قالا : حدثنا عبيد الله بن
موسى قال : حدثنا سفيان ، عن محمد بن عجلان ، عن عمرو بن شعيب ، عن أبيه ،
عن جده عبد الله بن عمرو ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " إذا أفاد
أحدكم امرأة ، أو خادما ، أو دابة ، فليأخذ بناصيتها ، وليقل : اللهم إني
أسألك من خيرها ، وخير ما جبلت عليه ، وأعوذ بك من شرها ، وشر ما جبلت عليه
உங்களில்
ஒருவர் ஒரு பெண்னை அல்லது ஒரு பணிவிடையாளரை அல்லது வாகனத்தை பெற்றுக்
கொண்டால் அதன் முன்பகுதியை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதிக்
கொள்ளட்டும் அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஹைரிஹா வஹைரி மா ஜுபிலத் அலைஹி
வஅஊது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜுபிலத் அலைஹி
அறிவிப்பவர் அப்துல்லாஹிப்னு அம்ரு(ரழி) ஆதாரம்: இப்னு மாஜா,இலக்கம்:1914
துஆவின் அர்த்தம்:
இறைவா!
இதன் நன்மையை உன்னிடம் வேண்டுகிறேன் இயற்கையாகவே இதில் அமைக்கப்பட்ட
நன்மையை உன்னிடம் வேண்டுகிறேன் மேலும் இதன் தீங்கை விட்டும் பாதுகாப்பு
தேடுகிறேன் இயற்கையாகவே இதில் அமைக்கப்பட்ட தீமையை விட்டும் உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன்.
முன்பகுதி என்பதற்கு ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை நாஸியத் என்பதாகும் நாஸியத் என்றால் முன்னெற்றி என அர்த்தமாகும்
எனவே மணப்பெண்னை முதன் முதலில் சந்திக்கும் திருமண நிகழ்வில் இதை நாம் செய்வது நபிவழியாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment